மரபுத் தொடர்கள்
ஒரு சொல் அல்லது சொற்றொடர்
அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழி வழியாக (மரபு
வழியாக) வழங்கிவரும்
பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் எனப்படும்.
பொதுவாக
வழங்கும் மரபுத் தொடர்கள் , சமூகத்திற்கு
சமூகம் வழங்கப்படும் மரபுத்தொடர்கள் எனும் அடிப்படையில் பல
மரபுத்தொடர்கள் தமிழில்
காணப்படுகிறன.
மரபுத்
தொடர்களுக்கான உதாரணங்கள்
[ அ ]
01 . அள்ளிக் குவித்தல் - நிறையச்
சம்பாதித்தல்
02 . அறைகூவுதல்-
போருக்கு அழைத்தல்
03 . அரை
மனிதன் - மதிப்பில்லாதவன்
04 . அண்டப்புழுகன்-
பொய்காரன்
05. அலைக்கழித்தல்-
அலட்சியம் செய்தல்
06. அறுதியிடுதல்
- முடிவுகட்டுதல்
07. அகடவிகடம்-
தந்திரம்
08. அரைப்படிப்பு
- நிரம்பாத கல்வி
09. அடியொற்றுதல்-
பின்பற்றுதல்
10. அள்ளியிறைத்தல்
- அளவுக்கு மேல் செலவு செய்தல்
11. அடுக்கு
பண்ணுதல் - ஆயத்தம் செய்தல்
12. அடியிடுதல்
- தொடங்குதல்
13. அடிநகர்தல்-
இடம்பெயர்தல்
14. அடிபிழைத்தல்
- நெறி தவறி நடத்தல்
15. அடி
திரும்புதல்- பொழுது சாய்தல்
16. அடிப்பிடித்தல்-
தொடருததல்
17. அடி
பிறக்கிடுதல் - பின்வாங்குதல்
18. அரக்கப்
பறக்க - விரைவாக
19. அடியுறைதல்
- வழிப்படுத்தல்
20. அவசரக்குடுக்கை
- பதற்றக்காரன்
21. அகலக்
கண் வைத்தல் - அளவு கடந்து போதல்
22. அழுங்குப்பிடி
- விடாப்பிடி
23. அறுதியிடல்
- முடிவு கட்டுதல்
24. அமளி
செய்தல் - குழப்பம் செய்தல்
25. அடி
பணிதல் - கீழ்ப்பணிதல்
26. அடி
விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச்
செய்தல்
27. அகலக்
கால் வைத்தல் - அளவுகடந்து போதல்
[ ஆ ]
28. ஆகாயக்
கோட்டை - மிதமிஞ்சிய கற்பனை
29. ஆறப்போடல்
- பிற்போடல்
30. ஆசை
வார்த்தை - ஏமாற்றுப் பேச்சு
31. ஆட்கொள்ளல்
- அடிமை கொள்ளல்
32. ஆழம்
பார்த்தல் - ஒருவரின் தகுதி பற்றி ஆராய்தல்
33. ஆயிரம்காலத்து
பயிர் - நெடுங்காலம் நிலைத்திருத்தல்
34. ஆடாபூதி
- ஏமாற்றுக்காரன்
[ இ ]
35. இரண்டும்
கெட்டான் - நன்மை தீமை அறியாதவன்
36. இலை
மறை காய் - வெளிப்படாது மறைந்திருத்தல்
37. இளிச்சவாயன்
- எளிதில் ஏமாறுபவன்
38. இட்டுக்கட்டுதல்
- இல்லாததை சொல்லுதல்
39. இலவு
காத்த கிளி - காத்திருந்து ஏமாறுதல்
40. இரண்டு
தோணியில் கால் வைத்தல் - ஒரே
நேரங்களில் இரு செயல்களில் ஈடுபடல்
[ ஈ ]
41. ஈரல் கருகுதல் - வேதனை
மிகுதல்
42. ஈவிரக்கம் - கருணை
43. ஈயோட்டுதல் - தொழிலெதுவுமின்றி இருத்தல்
44. ஈடேறுதல்
- உயர்வடைதல்
[ உ ]
45. உள்ளங்கையில்
நெல்லிக்கனி - வெளிப்படையாக தெரிதல்
46. உதவாக்கரை
- பயனற்றவன்
47. உப்பில்லாப்
பேச்சு - பயனற்ற பேச்சு
48. உச்சி
குளிர்தல் - மிக்க மகிழ்ச்சி அடைதல்
49. உருக்குலைதல்
- தன்னிலையிலிருந்து மாறுபடல்
50. உலை
வைத்தல் - பிறருக்கு அழிவு வருவித்தல்







0 comments:
Post a Comment